ஊரடங்கை மன அழுத்தம் இல்லாமல் கடக்க ‘கிச்சன் கார்டன் சேலஞ்ச்’ - ஐபிஎஸ் அதிகாரி யோசனை 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
சமூக விலகலைக் கடைப்பிடிக்கவும் வீட்டிலேயே மன அழுத்தம் இல்லாமல் இருக்கவும் கேரள ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் ‘கிச்சன் கார்டன் சேலஞ்ச்’ என்ற ஒரு சவாலை முன்வைத்து மக்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.
 
இந்த மாதிரியான ஊரடங்கை உலகம் இதற்கு முன்பு கண்டதில்லை. ஆகவேதான் இந்தப் பொது முடக்கக் காலத்தில் எத்தனை விதமான சம்பவங்களை நாடு சந்தித்திருக்கிறது. அப்படி ஒரு நிகழ்ச்சி கேரள மாநிலத்தில் உள்ள ஆட்சியர் கார்த்திக் ஐ.பி.எஸ் சந்திருக்கிறார். கடந்த ஆண்டு ஜூம் மாதம் எர்ணாகுளம் கிராமப்புற மாவட்ட காவல்துறைத் தலைவராக பெற்றப்பேற்றதிலிருந்து அவர் தனது வீட்டுக்குப் பின்புறமாக ஒரு காய்கறித் தோட்டத்தை வளர்த்து வருகிறார். இந்தத் தோட்டத்தில் ஒருநாளைக்குக் குறைந்தது அரை மணிநேரத்தைச் செலவழித்து வருகிறார். பச்சை மிளகாய், தக்காளி, வெண்டைக்காய் என விதவிதமாக பயிர் செய்து உள்ளார். இந்தத் தோட்டத்தில் காய்கறிகளைப் பயிரிடுவது மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஏற்பாடு என்கிறார். 
 
image
 
விவசாயத்தில் கார்த்திக்கிற்கு ஆர்வம் அதிகம். நாடு தழுவிய ஊரடங்கின் போது வீட்டிலேயே அதிக நேரம் செலவிட மக்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த அதிகாரிக்கு ஒரு சுவாரஸ்யமான யோசனை உதித்துள்ளது. ஆகவே கடந்த ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில், இவர் ‘கிச்சன் கார்டன் சேலஞ்ச்’ என்று சமூக ஊடகத்தில் ஒரு சவாலை அறிமுகப்படுத்தினார். 
 
அதன்பொருட்டு எர்ணாகுளம் கிராமப்புற காவல்துறை வரம்புக்குட்பட்ட மக்கள் மற்றும் காவல் நிலையங்களை தங்கள் சமையலறை தோட்டங்களின் படங்களை பதிவிடுமாறு கேட்டுக்கொண்டார். ஒருவரிடம் ஏற்கனவே சமையலறை தோட்டம் இல்லையென்றால், இந்தச் சவாலைப் பயன்படுத்தவும், புதியதாக ஒன்றைத் தொடங்க முயற்சி எடுக்கவும், அதன்பின் புகைப்படங்களைப் பகிரவும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
 
image
 
இந்த இணையச் சவால்கள் பலருக்கும் பொருந்தாது என்றாலும், அவர் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் பலர் சவாலை ஏற்கத் தொடங்கினர். அது படிப்படியாக வளர்ந்து பெரிய வெற்றியை உருவாகித் தந்தது. கார்த்திக்கின் இந்த யோசனையால் ஈர்க்கப்பட்ட கேரள மாநில காவல்துறைத் தலைவர் லோக்நாத் பெஹெரா ஐ.பி.எஸ் அவரைப் பாராட்டியுள்ளார். 
 
image
 
மேலும் மாவட்ட காவல்துறைத் தலைவர்கள் மற்றும் பிற உயர் போலீஸ் அதிகாரிகளிடம் இதேபோன்ற திட்டங்களைச் செயல்படுத்தும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  இது பொது மக்களை சமூக விலகலை மேற்கொள்ளவும் வீட்டிலேயே தங்கி இருக்கவும்  ஊக்குவித்து வருகிறது. இது தொடர்பான செய்தியை ‘தி நியூஸ் மினிட்’ செய்தி தளம் வெளியிட்டுள்ளது. 
 
loading...

Advertisement

Advertisement

Advertisement