"பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எங்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை" பாக். வீரர் வேதனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரோகித் சர்மா மீது பிசிசிஐ நம்பிக்கை வைத்தது போல எங்கள் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை வைக்கவில்லை என்று அந்நாட்டு கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக் வேதனை தெரிவித்துள்ளார்.


Advertisement

image

இந்தியா போல பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அங்கும் பொது முடக்கம் அமலில் இருக்கிறது. இதன் காரணமாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களிடையே பேசி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக் இன்ஸ்டாகிராமில் உரையாற்றினார். அப்போது அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் மீதான சில வருத்தங்களை பதிவு செய்தார். இது பாகிஸ்தானில் இப்போது வைரலாகி வருகிறது.


Advertisement

இன்ஸ்டாகிராமில் பேசிய அவர் " பாகிஸ்தான் வீரர்களிடம் ஒருவிதமான பயம் இருக்கிறது. அதாவது ஒன்றோ அல்லது இரு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால் அணியிலிருந்து தூக்கப்படுவோம் என்ற பயம்தான் அது. இந்த பயம் வீரர்களின் திறனை பாதிக்கும். சில போட்டிகளில் சரியாக பங்காற்றவில்லை என்றால் அவர்களை ஒதுக்கக் கூடாது" என தெரிவித்துள்ளார்.

image

இது குறித்து மேலும் தொடர்ந்த அவர் "கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்களிடையே மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது. இதுதான் வீரர்கள் தொடர்ந்து சீராக விளையாடாமல் போவதற்கு காரணமாக அமைகிறது. இதுபோன்ற ஒரு சூழ்நிலை உலகில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியிலும் இல்லை. உதாரணத்துக்கு இந்திய வீரர் ரோகித் சர்மா தொடக்க காலத்தில் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் அவர் மீது நம்பிக்கை வைத்த அந்நாட்டு வாரியம் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியது. இப்போது அவர் ஜொலிக்கிறார்" என வருத்தத்துடன் பதிவு செய்துள்ளாகர் இமாம்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement