"சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு இப்போது வாய்ப்பில்லை" - அஸ்வின் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலகளவில் இப்போதைக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு வாய்ப்பில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.


Advertisement

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு மே 17 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், அக்டோபரில் டி20 உலகக் கோப்பை போட்டியும் நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. இந்தப் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

image


Advertisement

"கிரிக்இன்போ" இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ள ரவிசந்திரன் அஸ்வின் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார், அதில் "கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பல நாடுகளில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதனால் இப்போதைக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வாய்ப்பு குறைவாக இருக்கிறது. நாம் இன்னமும் கொரோனாவை முழுமையாக வெல்லவில்லை. கிரிக்கெட்டின் நலன் கருதினால், இப்போதைக்கு பல கிரிக்கெட் தொடர்கள் உடனடியாக நடக்க வாய்ப்பில்லை" என தெரிவித்துள்ளார்.

image

டெஸ்ட் போட்டிகளை குறைந்த நாட்களில் நடத்தும் ஐசிசி திட்டம் குறித்து பேசிய அஸ்வின் " 4 நாள் டெஸ்ட் போட்டி திட்டம் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. நான் ஒரு சுழற்பந்துவீச்சாளர், ஏற்கெனவே இருக்கும் நாளிலிருந்து ஒரு நாளை தூக்கிவிட்டால் எப்படி இந்தப் போட்டி ஆராக்கியமானதாக இருக்கும் என தெரியவில்லை. இது டெஸ்ட் போட்டியின் சுவாரஸ்யத்தை கெடுத்துவிடும் என்றே நினைக்கிறேன்" என கூறியுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement