வீடுகளைவிட்டு வெளியே வரும் அமெரிக்கர்கள் - மீண்டும் வேலைக்கு அழைக்கும் நிறுவனங்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
அமெரிக்காவில் டெக்சாஸ், ஜார்ஜியா உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் வெளியே வரத் துவங்கியுள்ள நிலையில், கலிபோர்னியா, நியூயார்க்கில், கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. 
 
டெக்சாஸ் மாநிலத்தில், ஒரு மாதத்திற்கு மேலாக வர்த்தகம் முடங்கிய நிலையில், வெள்ளியன்று மீண்டும் வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. உணவகங்கள், சில்லறை விற்பனையகங்கள், ஷாப்பிங் மால்களில் 25 சதவிகித ஊழியர்களுடன் திறக்கப்பட்டன. கொரோனா பாதிப்பு குறைந்தால் மே 18 ஆம் தேதிக்குப்பிறகு அடுத்த கட்ட தளர்வு அறிவிக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. 
 
image
 
டெக்சாஸ் முழுவதுமே, பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலைக்குத் திரும்ப அழைக்கத் திட்டமிட்டுள்ளன. இதேபோல பிற மாநிலங்களிலும் கட்டுப்பாடுகளைச் சற்று தளர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. மார்ச் 21 முதல் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், 3 கோடி அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள். 
 
image
 
இதனால், பாதிப்புகள் குறைந்துவரும் மாநிலங்கள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் துவங்கியுள்ளன. அதேநேரத்தில் அதிக பாதிப்புகளைச் சந்தித்துவரும் கலிபோர்னியா, நியூயார்க் மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன.
loading...

Advertisement

Advertisement

Advertisement