JUST IN

Advertisement

‘கடன்தொல்லை, உணவு கூட அளிக்க முடியவில்லை’’: பெண் குழந்தையை கொன்ற தந்தை பகீர் வாக்குமூலம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தெலங்கானாவில் வறுமையின் காரணமாக தன் மகளின் கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தையை போலீஸார் கைது செய்தனர்.


Advertisement

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு மே 17 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தப் பொது முடக்கத்தால் தினசரி கூலி தொழிலாளர்கள், வெளி மாநிலத் தொழிலாளர்கள் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளும் தாங்கள் விளைவித்த பொருள்களை விற்க முடியாமல் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.

image


Advertisement

இந்நிலையில், தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கோங்குலுரு பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வறுமையின் காரணமாக தன் 4 வயது மகளை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையைும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோாகுலுரு பழங்குடி கிராமத்தைச் சேரந்த விவசாயி ஜீவா (30) இவர் தன்னுடைய குடிசைக்கு வெளியே தனது 4 வயது மகளுடன் உறங்கியுள்ளார். அப்போது திடீரென அலரியடித்து எழுந்த ஜீவா தன் மகளை காணவில்லை என கூறியுள்ளார்.

image

இதனையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் தேடியபோது வீட்டின் அருகிலேயே 4 வயது சிறுமி கழுத்து அறுப்பட்டு இறந்தது தெரியவந்தது. பிரேதத்தை கைப்பற்றிய போலீஸார் அதனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து உயிரிழந்த குழந்தையின் தந்தையான ஜீவாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையின் போது திடீரென உடைந்து அழுத ஜீவா, தன் மகளை தானே கொன்றதாக ஒப்புக்கொண்டார்.


Advertisement

image

இது குறித்து போலீஸிடம் கூறிய ஜீவா "நானே என் குழந்தையை கொலை செய்தேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு ஏகப்பட்ட பணப் பிரச்னை, அதிலிருந்து எப்படி மீள்வேன் என்று தெரியவில்லை. எனக்கு மூன்று குழந்தைகள் அவர்களுக்கு எப்படி உணவளிப்பேன் என தெரியவில்லை. மூன்றில் ஒரு குழந்தையை கொன்றுவிட்டால் மீதம் இருப்பவர்களுக்கு என்னால் உணவு கொடுக்க முடியும் அவர்களை பார்த்துக்க முடியும் என்பதால் இதனை செய்துவிட்டேன்" என தெரிவித்துள்ளார்.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement