"எக்ஸ்ட்ரா பிரியாணி சாப்பிடுவார் ஷமி " ரகசியத்தை உடைத்த ரோகித் சர்மா !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பச்சை பசேல் என இருக்கும் பிட்சை (மைதானத்தை) பார்த்தால் எக்ஸ்ட்ரா பிரியாணி சாப்பிட முகமுது ஷமி விருப்பப்படுவார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.


Advertisement

image

கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வீட்டில் ஓய்வில் இருக்கும் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே உரையாடி வருகின்றனர். சிலர், இன்ஸ்டாகிராம் வழியாக மற்ற வீரர்களுடன் பேசி வருகின்றனர். இதைப் போலவே இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகளான ஸ்மிரிதி மந்தானா, ஜெமிமா ரோட்ரிஜஸூடன் தொலைக்காட்சி மூலம் காணொலியில் ரோகித் சர்மா உரையாடினார். அப்போது ஜாலியாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.


Advertisement

image

2013 ஆம் ஆண்டு ரோகித் சர்மாவும் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியும் ஒன்றாக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர்கள். எனவே ஷமி குறித்து பகிர்ந்துக்கொண்ட அவர் "வலைப் பயிற்சிகளின்போது எப்போதும் எங்களுக்கும் பச்சைப் பசேலென இருக்கும் பிட்ச் மட்டுமே கிடைக்கும். அதைப் பார்த்தவுடன் ஷமி குஷியாகிவிடுவார், எக்ஸ்ட்ரா பிரியாணி சாப்பிடும் வெறியோடு அன்றைய தினம் சிறப்பாக பந்துவீசுவார்" என்றார்.

image


Advertisement

மேலும் தொடர்ந்த ரோகித் சர்மா " பும்ராவும் வலையில் சிறப்பாக பந்துவீசுவார், ஆனால் அவர் அணியில் மூன்று ஆண்டுகளாகத்தான் இருக்கிறார். ஆனால் நானும் ஷமியும் 2013 இல் இருந்தே ஒன்றாக விளையாடி வருகிறோம். ஆனால், இப்போது அணியின் பும்ராவுக்கும் ஷமிக்கும் பெரும் போட்டியே இருக்கிறது. அது யாருடைய ஹெல்மெட்டை அதிகம் பதம் பார்க்கலாம் என்பதுதான்" என்றார் வேடிக்கையாக.

loading...

Advertisement

Advertisement

Advertisement