வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், அதனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சமீபத்தில் செய்தி வெளியாகியது. அந்தச் செய்தியில் புகைப்பிடித்தல், உடல் பருமன், அதிக வேலைப்பளு காரணமாக இதய நோயால் கிம் ஜாங் உன் பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் கூறப்பட்டிருந்தது. வடகொரியா தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
வட கொரிய விவகாரங்களைக் கவனிக்கும் அதிகாரிகளின் தகவலைக் குறிப்பிட்டு சிஎன்என் இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது. இதனிடையே கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வெளியான தகவலைத் தென் கொரியா மறுத்தது. அது போல எந்த விஷயமும் வடகொரியாவில் தென்படவில்லை என தென்கொரியா கூறியது.
இந்நிலையில் உரத் தொழிற்சாலையை வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் திறந்துவைத்த சில புகைப்படங்களை வடகொரியா வெளியிட்டுள்ளது. நேற்று நடந்த விழாவில் அதிபர் கிம் ஜாங் உன், தன் சகோதரியுடன் கலந்துகொண்ட புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. கிம் ஜாங் உன் குறித்து 3 வாரங்களாக பல தகவல்கள் வெளியான நிலையில் அவர் விழா ஒன்றில் கலந்துகொண்டதற்கான புகைப்படங்கள் இன்று வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
“எச்சில், வியர்வை கொண்டு பந்தை தேய்க்கக்கூடாது” - ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கட்டுப்பாடு
Loading More post
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே தொகுதிப்பங்கீடு விவரங்கள் இன்று அறிவிப்பு
"சிஎஸ்கே அணியால் ஆட்டத்திறன் மேம்பட்டது!" - 'சுட்டிக் குழந்தை' சாம் கரன்
தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு உலகின் தலைசிறந்த 20 பெண்மணிகளுக்கான விருது
புதுச்சேரி: முதல்வர் பதவியை கேட்கும் திமுக - கலக்கத்தில் காங்கிரஸ்
கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து - 9 பேர் உயிரிழப்பு
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!