JUST IN

Advertisement

“பிளாஸ்மா தெரபி மூலம் ஒருவர் கொரோனாவிலிருந்து குணமடைந்தார்” - அரவிந்த் கெஜ்ரிவால் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
டெல்லியில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அது குறித்து மாநில அரசு விரிவாகச் சோதனை செய்யத் தொடங்கியுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  
 
நாட்டின் தலைநகரான டெல்லியில் இதுவரை 3,515 கொரோனா வைரஸ் நோயாளிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில், 10 லட்சம்  மக்களில்  2,300 பேர் வீதம்தான் மாநில அரசு சோதனை நடத்தியுள்ளது.  இது தேசிய சராசரியை விட அதிகமானதாகும் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
 
image
 
மேலும் இது குறித்துப் பேசிய கெஜ்ரிவால், "எங்கள் நோக்கம் அதிக எண்ணிக்கையிலான மக்களைச் சோதிப்பதேயாகும். இதனால் கொரோனா வைரஸ் பாசிடிவ் நோயாளிகளைக் கண்டறிந்து சரியான சிகிச்சையைத் தொடங்க முடியும்” என்று கூறியுள்ளார். கொரோனா  நோய்க்கு எதிரான போராட்டத்தில்  தீவிரமாகச் செயல்பட்டு நாட்டின் தலைநகர் சிறப்பை வெளிப்படுத்துவோம். 
 
 
இதனிடையே இதுவரை 1,094 பேர்  குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாகச் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிக்கலான கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி பாசிடிவ் என மருத்துவ முடிவுகளைக் காட்டியுள்ளது என்று  கூறிய கெஜ்ரிவால், டெல்லியின் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் பிளாஸ்மா தெரபி  அளிக்கப்பட்ட முதல் நோயாளி இந்த நோயிலிருந்து மீண்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். அந்த நோயாளி நேற்று மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறினார்.
 
image
 
மேலும் அவர், "நாங்கள் ஒரு சில நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி வழங்கினோம். அவர்களில் முதல் நோயாளி குணமடைந்து, பிறகு வெளியேற்றப்பட்டார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்தார். ஆனால் குணமடைந்து வெளியேற்றப்பட்டார்.  ஆரம்ப சிகிச்சைக்கு பிளாஸ்மா தெரபி மிகச் சிறப்பானது. மிக மோசமான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி மருத்துவ பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. இந்த நிலை எங்கள் மாநிலத்தில் தொடரும்”என்று கூறியுள்ளார்.
 
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement