JUST IN

Advertisement

வெளியானது தனுஷின் “ஜகமே தந்திரம்” படத்தின் புதிய போஸ்டர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜகமே தந்திரம் படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.


Advertisement

பேட்ட படத்திற்கு அடுத்தப்படியாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தை இயக்கி வந்தார். தனுஷ் கேங்ஸ்ட்ராக நடிக்கும் இப்படத்தில் கலையரசன்,  நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பான மோஷன் போஸ்டர், புகைப்படங்களும் சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது. இவை தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

image


Advertisement

இதனிடையே ஜகமே தந்திரம் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடந்து வந்தநிலையில், கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ ஜகம்  சுகமடைந்ததும்...ஜகமே தந்திரம்” என பதிவிட்டு படத்தின் அடுத்த லுக்கையும் அதில் இணைத்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதள்ங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement