பொது முடக்கத்தால் தெலங்கானாவில் சிக்கியிருந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சிறப்பு ரயில் ஒன்று ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு புறப்பட்டுச் சென்றது.
கொரோனா பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்த தொழிலாளர்கள் அந்தந்த மாநிலங்களில் சிக்கிக் கொண்டனர். வருமானம் ஏதும் இல்லாததால் அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் சட்ட மேலவைக்கு தேர்தல்.. உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவி தப்புகிறது?
இந்நிலையில், தெலங்கானாவில் சிக்கியிருந்த ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்கள் ஆயிரத்து 200 பேர் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். 24 பெட்டிகளை கொண்ட ரயில் தெலங்கானாவின் லிங்கம்பள்ளி என்ற பகுதியிலிருந்து ஜார்க்கண்டின் ஹாதியா பகுதிக்கு இயக்கப்படுகிறது. தெலங்கானா மாநிலம் கோரிக்கை விடுத்ததை அடுத்து, ரயில்வே அமைச்சகத்தின் ஒப்புதலின் பேரின் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் புறப்படும் மாநிலமும், சென்றடையும் மாநிலமும் கோரிக்கை விடுத்து அதனை ரயில்வே அமைச்சகம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இத்தகையை சேவை தொடர்ந்து வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை