உணவில் விஷமா ? ஒருவர் உயிரிழப்பு.. 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஸ்ரீபெரும்புதூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 8 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் ,ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவரது தங்கை முருகம்மாள் மற்றும் தம்பி அறிவுச்சுடர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் நேற்று இரவு கீரை சாதம் சாப்பிட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்ட பெண்கள் 4 பேர், ஆண்கள் 3 பேர், ஒரு குழந்தை என 8 பேரும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

image


Advertisement

மகாராஷ்டிராவில் சட்ட மேலவைக்கு தேர்தல்.. உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவி தப்புகிறது?

இதில் 80 வயது மூதாட்டி சொக்கம்மாள் என்ற மூதாட்டிக்கு உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் மேல்சிகிச்சைக்காக அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மற்ற 7 பேரும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement