“என்னைத் தோற்கடிக்கச் சீனா என்ன வேண்டுமானாலும் செய்யும்”- ட்ரம்ப் குற்றச்சாட்டு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பு 61ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் தனி மனித இடைவெளி தொடர்பான உத்தரவை நீட்டிக்கப்போவதில்லை எனவும் ட்ரம்ப் கூறியிருக்கிறார்.
 
உலகளவில் கொரோனா தொற்றுக்கு பெரும் உயிரிழப்புகளைச் சந்தித்த நாடாகியுள்ளது அமெரிக்கா. கொரோனா தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளில் அதிபர் ட்ரம்ப் கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்துள்ள ட்ரம்ப், வரும் நவம்பரில் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் தான் தோற்க வேண்டும் எனச் சீனா விரும்புவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். 
 
image
 
தன்னுடைய தோல்விக்காகச் சீனா எதை வேண்டுமானாலும் செய்யும் எனச் சாடியுள்ள அவர், வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்களில் கடும் நெருக்கடி கொடுத்ததால் தான் தோற்க வேண்டும், ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் வெல்ல வேண்டும் எனச் சீனா நினைப்பதாகத் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் குறித்து சீனா முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும் எனக் கூறினார்.
 
image
 
ட்ரம்ப் இப்படி சினா மீது குற்றம் சுமத்திவரும் நிலையில் அமெரிக்காவிலோ கொரோனா பாதிப்பு 10 லட்சத்தைக் கடந்துள்ளது. உயிரிழப்புகளும் 61 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் ட்ரம்பின் மற்றொரு நடவடிக்கை விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
 
மக்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற உத்தரவை நீட்டிக்கப்போவதில்லை என ட்ரம்ப் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஒரு மாத காலமாக வெள்ளை மாளிகையிலேயே இருக்கும் தான், அடுத்த வாரம் அரியானாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
loading...

Advertisement

Advertisement

Advertisement