[X] Close >

நோயுற்ற மகளுடன் அருகில் இல்லாமல் மருத்துவப் பணி.. உயிரிழந்த மருத்துவரின் குழந்தை..!

The-doctor-s-baby-dies-while-on-the-job--Proud-as-a-medical-work-duty

 தனது குழந்தை நோயுற்று இருப்பது தெரிந்தும் அவளுடன் இல்லாமல் மருத்துவமனையில் மருத்துவ பணியை தொடர்ந்த மருத்துவரின் குழந்தை உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.


Advertisement

இந்தியாவை பொருத்தவரை கொரோனா வைரஸ் தொற்றால் 30,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் கூட அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது.

இதனிடையே அவர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டும் வகையில் சமூக வலைதளங்களில் மக்கள் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், தனது குழந்தை வீட்டில் நோயுற்று இருப்பது தெரிந்தே வீட்டிற்கு செல்லாமல் மருத்துவ பணியை தொடர்ந்த மருத்துவரின் குழந்தை உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.


Advertisement

image

மகாராஷ்டிராவில் சிக்கித் தவிக்கும் தமிழக கலைஞர்கள் - மீட்க அரசுக்கு கோரிக்கை


மத்தியப் பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் பகுதியை சேர்ந்த மருத்துவர் தேவந்திர மெக்ரா. இவர்  இந்தூரில் மருத்துவ பணியாற்றிக் கொண்டிருந்தபோது, இவரது 15 மாத குழந்தை இறந்துள்ளது. மகள் நோயுற்று இருந்த காலத்திலும் கூட, அவர் மகளுடன் இல்லாமல் மருத்துவமனையில் மருத்துவ பணியை தொடர்ந்துள்ளார்.


Advertisement

“என் கணவர் எப்போதுமே மற்றவருக்கு உதவுவார்”-தாக்குதலில் உயிரிழந்த வீரரின் மனைவி நிவாரண நிதி

இது குறித்து மருத்துவர் கூறும் போது “ அவள் ஹைட்ரோசெபாலஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள். ஆனால் இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் எனது சேவை நாட்டிற்கும் தேவை என்பதை உணர்ந்தேன். அதனால் மருத்துவ பணியை தொடர முன்வந்தேன். தற்போது அவள் இறந்து விட்டாள். அவளை பார்க்கச் செல்வதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்” என்றார்.

 

 


Hoshangabad: 15-month-old daughter of a doctor Devendra Mehra passed away while he was on duty in Indore.He says,"She had hydrocephalus,I didn't want to leave home while she was sick but thought my services were needed.After she passed away, ADM gave me permission to travel here"

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close