JUST IN

Advertisement

வியட்நாம் போரில் ஏற்பட்டதை விட அதிக உயிரிழப்பு - ஸ்தம்பிக்கும் அமெரிக்கா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வியட்நாம் போரில் ஏற்பட்ட உயிரிழப்பை விட, தற்போது கொரோனாவால், அமெரிக்காவில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 10 லட்சத்தை கடந்திருக்கிறது.


Advertisement

அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனினும் பொருளாதாரம் முடங்கியதால், பொது முடக்கத்தை நீக்க வேண்டும் என்ற போராட்டங்கள் அங்கு தொடர்ந்து வலுத்து வருகின்றன. தனிமனித இடைவெளி, அவ்வப்போது கைகளை சுத்தம் செய்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.

image


Advertisement

இதனால் வியட்நாம் போரில் ஏற்பட்ட உயிரிழப்பை விட, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வியட்நாம் போரில் 58 ஆயிரத்து 220 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது கொரோனாவால், 58 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதய நோயுடன் படுத்த படுக்கையாய் கணவர்.. 2 மகள்களுடன் தவிக்கும் தாய் - உதவி கிடைக்குமா..?

 


Advertisement

image

"தோனி, கோலி, சச்சினிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்" பாக். வீரர் கம்ரான் அக்மல்


மேலும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 10 லட்சத்தை கடந்துள்ளது. இந்தச் சூழலில், அடுத்து வரும் வாரங்களில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஆகஸ்ட் மாதத்திற்குள் உயிரிழப்பு 74 ஆயிரத்தை கடக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement