தடையை மீறி செயல்பட்ட 2 வங்கிகளுக்கு சீல் - உள்ளே சிக்கிய ஊழியர்களால் பரபரப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாமக்கல் அருகே ஊரடங்கு உத்தரவில் விதிக்கப்பட்ட தடையை மீறி செயல்பட்ட 2 வங்கிகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Advertisement

நமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கடந்த 17-ஆம் தேதி முதல் அரசின் மறு உத்தரவு வரும் வரை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பரமத்தி வேலூரில் உள்ள அரசுடமையாகப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கி ஆகிய இரு வங்கிகளும் செயல்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்தினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி பரமத்தி வேலூர் வட்டாட்சியர் செல்வராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு வங்கி திறந்திருந்ததைப் பார்த்த அதிகாரிகள் அங்கிருந்தவர்களை வங்கியில் இருந்து வெளியேருமாறு கூறி வங்கிக்கு சீல் வைத்தனர்.


Advertisement

image
இதேபோல் அரசுடமையாக்கப்பட்ட வங்கிக்கு சென்று பார்த்தபோது வங்கிக்கு வெளியே பூட்டப்பட்டிருந்தது. வங்கிக்குள் யாராவது உள்ளார்களா என சத்தம் போட்டு கூப்பிட்டுள்ளனர். மேலும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். ஆனால் பதில் எதுவும் வராததால் வங்கிக்குள் யாரும் இல்லை என நினைத்து ஏற்கெனவே பூட்டப்பட்டிருந்த பூட்டிற்கு சீல் வைத்து சென்றனர்.

image

பின்னர் வங்கியின் மேலாளர் எங்களை உள்ளே வைத்து வங்கிக்கு சீல் வைத்துள்ளதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி அங்கு வந்த காவல்துறை ஆய்வாளர் மனோகரன், வட்டாட்சியரை தொடர்பு கொண்டு கேட்டபோது வங்கி பூட்டப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். பின்னர் அங்கு வந்த வட்டாட்சியர், சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கதவுகள், ஜன்னல்களை தட்டியும்,தொலைபேசிக்கு தொடர்பு கொண்டும் யாரும் உள்ளே இல்லை என கூறியதன் அடிப்படையில்தான் சீல் வைக்கப்பட்டதாக கூறினார். பின்னர் சீலை பிரித்து வங்கியை திறந்து உள்ளே சிக்கியிருந்த 3 பெண் உட்பட 6 பேரை வெளியே அனுப்பினர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement