கொரோனாவால் நூறு கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் -  எச்சரிக்கும் ஆய்வு..!

கொரோனாவால் நூறு கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் -  எச்சரிக்கும் ஆய்வு..!
கொரோனாவால் நூறு கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் -  எச்சரிக்கும் ஆய்வு..!
உலகில் எட்டில் ஒரு பங்கு மக்களை கொரோனா தாக்க வாய்ப்புள்ளது என்று பன்னாட்டு மீட்புக் குழு என்ற அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் மூலம் இந்தத் தகவல் தெரியவந்திருக்கிறது. 
 
உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த சர்வதேச நாடுகள் மனிதாபிமான உதவிகளையும் நிதி சார்ந்த உதவிகளையும் வழங்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. குறிப்பாகப் பலவீனமான நாடுகளான ஆப்கானிஸ்தான், சிரியா ஆகியவை கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், எனவே அந்நாடுகளில் பெருமளவில் நோய் பரவும் முன் அவசர கதியில் நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. 
 
 
உலக சுகாதார அமைப்பின் தகவல்களைக் கொண்டு சர்வதேச மீட்புக் குழு, இந்த ஆய்வறிக்கையை தயாரித்துள்ளது. கொரோனாவின் முழு வீரியத்தையும் உலக நாடுகள் இதுவரை பார்க்கவில்லை என்றும் போர் பாதித்த மற்றும் ஏழை நாடுகளில் அதைப் பார்க்க முடியும் என்றும் கூறியுள்ளது. நூறு கோடி பேர் பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருப்பதால், அதை தடுக்க தேவையான உதவிகளையும், நன்கொடைகளையும் உலக நாடுகள் துரித கதியில் வழங்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 
 
 
தற்போது உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்திருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 30 லட்சத்தை எட்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் ஜலதோஷம் எல்லோருக்கும் வந்து போகும் என்பதே பன்னாட்டு மீட்புக்குழுவின் ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்திருக்கிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com