JUST IN

Advertisement

கொரோனா பாதிப்பில் சீனாவை முந்தியது ரஷ்யா - ஒரே நாளில் 6, 411 பேருக்கு பாதிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கையில் சீனாவை பின்னுக்கு தள்ளி ரஷ்யா அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக மாறியுள்ளது.


Advertisement

ரஷ்யா அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் படி ஒரே நாளில் புதிதாக 6 ஆயிரத்து 411 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 558ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவிய சீனாவில் கோவிட் 19 வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரமாக இருக்கிறது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் 867 பேர் வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.


Advertisement

image

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2லட்சத்து 11ஆயிரத்தை கடந்துள்ளது. இருப்பினும், நம்பிக்கையளிக்கும் வகையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 9லட்சத்து 23ஆயிரமாகவுள்ளது. அமெரிக்காவில்தான் அதிகமாக 10 லட்சத்து 10 ஆயிரத்து 507 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2லட்சத்து 29ஆயிரத்து 422ஆக உள்ளது.

இத்தாலியில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 99ஆயிரத்து 414. பிரான்ஸில் தான் உயிரிழப்பு விகிதம் மிக அதிகமாகவுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களில் 14 சதவீதம் பேர் மரணமடைந்துள்ளனர். பிரிட்டனின் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21ஆயிரத்து 92ஆக உள்ளது.


Advertisement

செப். இறுதியில் கொரோனாவுக்கு தடுப்பூசி - ஒரு மருந்தின் விலை சுமார் ரூ.1,000? 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement