கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பிய காவலருக்கு ராஜ மரியாதை : வைரலான வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
கொரோனாவில் இருந்து மீண்டு வந்த மும்பை காவலர் ஒருவரை போலீசார் கைதட்டி வரவேற்ற நிகழ்வு நெட்டிசன்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. 
 
இந்திய அளவில் கொரோனா நோய்த் தொற்றுக்கு 29,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 8,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நாட்டிலேயே அதிக எண்ணிக்கையாகும். ஆகவே அந்த மாநிலம் கொரோனாவை எதிர்த்து மிகக் கடுமையாகப் போராடி வருகிறது. இந்த மாநிலத்தில் மும்பையில்தான் அதிக நோயாளிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் தீவிரத்தை மக்களுக்கு உணர்த்தவே நேற்று மும்பை மேயரான கிஷோரி, செவிலியை உடையில் மருத்துவமனைக்கு வந்து பணிகளை மேற்கொண்டார்.
 
Mumbai police team enforcing lockdown attacked by mob, 4 detained
 
இந்நிலையில், மும்பையில் 4 காவலர்கள் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதில் ஒருவரை வரவேற்கும் விதமாக அவரது சக காவலர்கள் அனைவரும் கூடி நின்று கைதட்டி வரவேற்கும் காட்சி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பை காவல்துறை சார்பில் பகிரப்பட்டுள்ளது.  அதனைக் கண்ட நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். 
 
Coronavirus in Maharashtra: COVID-19 lockdown in Mumbai, Pune ...
 
இது குறித்த வீடியோ பதிவில், “வானிலைக்கு புயல்களின் வலிமையைத் தாங்கும் தைரியம் தருவது எது என உங்களுக்குத் தெரியுமா? அது நீங்கள்தான். உங்கள் முடிவற்ற அன்பு. உங்கள் விலைமதிப்பற்ற ஆதரவு” எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ "நான்கு மும்பை காவல்துறை அதிகாரிகள் கொரோனா வைரஸை தாக்கத்திலிருந்து மீண்டு வீட்டிற்கு வந்தபோது அவர்கள் வரவேற்கப்பட்டனர்" என்ற குறிப்பிடுகிறது. 
 
பகிரப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள், இந்தக் காணொளி 13 ஆயிரம்  பார்வைகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
View this post on Instagram

Do you know what gives us the courage to weather the mightiest of storms? It’s you. Your endless love. And your invaluable support. Thank you, Mumbai! #TakingOnCorona #coronawarriors #coronavirus #corona #waragainstvirus


Advertisement

A post shared by Mumbai Police (@mumbaipolice) on

loading...

Advertisement

Advertisement

Advertisement