சென்னையில் எங்கெங்கு எத்தனை பேருக்கு கொரோனா?

சென்னையில் எங்கெங்கு எத்தனை பேருக்கு கொரோனா?
சென்னையில் எங்கெங்கு எத்தனை பேருக்கு கொரோனா?

சென்னையில் எங்கெங்கு எத்தனை பேருக்கு கொரோனா என்பதை மண்டல வாரியாக மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சீனாவில் பரவத்தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது அங்கு கட்டுக்குள் இருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளை வெகுவாக பாதித்து வருகிறது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 29,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 872 பேர் உயிரிழந்துள்ளனர். 6,869 பேர் சிகிச்சைப்பெற்று குணமடைந்துள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை 1937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 52 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில், சென்னையில் மட்டும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் நாகப்பட்டினத்தில் 4 பேருக்கும் விழுப்புரத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை மண்டல வாரியாக மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

திருவொற்றியூர் 14+01 = 15
மணலி 01+00 = 01
மாதவரம் 03+00 = 03
தண்டையார்பேட்டை 65+01 = 66
ராயபுரம் 145+13=158
திருவிக நகர் 85+09 = 94
அம்பத்தூர் 02+13 = 15
அண்ணாநகர் 45+08 = 53
தேனாம்பேட்டை 55+01 = 56
கோடம்பாக்கம் 54+ 00 = 54
வளசரவாக்கம் 17+00 = 17
ஆலந்தூர் 09+00 = 09
அடையாறு 17+00 = 17
பெருங்குடி 08+01 = 09
சோழிங்கநல்லூர் 02+00 = 02
மற்ற மாவட்டங்கள் 01+00 = 01

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com