[X] Close >

முகக்கவசம் அணியவில்லை என்று சங்கிலியால் கட்டி வைக்கப்பட்ட சிஆர்பிஎஃப் காவலர் ?

Cobra-commando-allegedly-chained-at-Karnataka-police-station-for-not-wearing-mask
கர்நாடக மாநிலம் பெலகாவி காவல் நிலையத்தில் சிஆர்பிஎஃப் கோப்ரா கமாண்டோவை சேர்ந்த காவலர் ஒருவரை சங்கிலியால் கட்டிவைத்துள்ள புகைப்படம் மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 
 
கர்நாடக மாநிலம் பெலகாவிலுள்ள காவல் நிலையத்தில் சிஆர்பிஎஃப் கோப்ரா கமாண்டோவை சேர்ந்த ஒருவரை சங்கிலியால் கட்டிவைத்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியானது. அந்தப் படத்தில் அந்தக் காவலர் அரைகுறை ஆடையுடன் கைகளில் பெரிய இரும்புச் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டுள்ளார். இது குறித்த வீடியோவை ட்விட்டரில்  ஒருவர் வெளியிட்டுள்ளார். அதில் கமாண்டோ, சச்சின் சுனில் சாவந்த், காவல் நிலையத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு உட்கார வைக்கப்பட்டுள்ள காட்சிப் பதிவாகி இருந்தது.  
 
image
 
அதனையடுத்து சர்ச்சை வெடித்தது.  இந்த விவகாரம் குறித்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) உயர் அதிகாரிகள் மாநில காவல்துறைத் தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். 
 
இந்த விவகாரம் குறித்து சிஆர்பிஎஃப் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி எம்.தினகரன், “கர்நாடக மாநில காவல்துறைத் தலைவரிடமிருந்து  இந்த வழக்கை நாங்கள் எடுத்துள்ளோம். செவ்வாய்க்கிழமை இவரது ஜாமீன் மனு வழக்கு நீதிமன்றத்தில் வருகிறது. அப்போது சிஆர்பிஎஃப் காவலருடன் ஒரு உள்ளூர் அதிகாரி  நீதிமன்றத்தில் இருக்க வேண்டும். அதன் பின்னர் வாதங்களை வைத்து விசாரணை தொடரப்படும் ”என்று தெரிவித்துள்ளார். 
 
image
கமாண்டோ சாவந்த், கடந்த 11 ஆம் தேதி வரை விடுப்பில் இருந்துள்ளார். இதனிடையே கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது.  இந்த ஊரடங்கு உத்தரவு காலத்தில் பாதுகாப்புக்கான முகக் கவசம் அணியாமல் சாவந்த் வீதிகளில் சுற்றித் திரிந்து வந்ததாகவும், அது குறித்து விசாரித்தபோது இழிவான சொற்களைப் பயன்படுத்தியதாகவும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 
 
இந்தச் சம்பவம் ஏப்ரல் 23 அன்று நடந்ததாகத் தெரிகிறது. உடனே கமாண்டோ வீரர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். அதன்பிறகு கர்நாடகாவின் பெலகாவி காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டார் என்று தெரியவந்துள்ளது. இது குறித்த செய்தியை ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close