நிதியை முடக்குவது என்பது அபகரிப்பு அல்ல - ஃபிராங்க்ளின் டெம்பிள்டன்

Winding-up-of-funds-does-not-mean-write-off-of-investor-money--says-Franklin-Templeton

குறிப்பிட்ட காலத்திற்குள் முதலீட்டாளர்கள் பணத்தை திரும்பப் பெறுவார்கள் என ஃபிராங்க்ளின் டெம்பிள்டனின் இந்தியாவிற்கான தலைவர் சஞ்சய் சாப்ரே உறுதி அளித்துள்ளார்.


Advertisement

ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனம் கடன் சார்ந்த 6 திட்டங்களை ரத்து செய்வதாக கடந்த 23ஆம் தேதி அறிவித்தது. இத்திட்டங்களில் முதலீடு செய்யப்பட்ட 31 ஆயிரம் கோடி ரூபாயையும் இந்நிறுவனம் முடக்கி வைத்துள்ளது.

ஏப்ரல் 22ஆம் தேதி நிலவரப்படி இந்த முதலீடுகளின் சந்தை மதிப்பு 25 ஆயிரம் கோடி ரூபாய். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போடப்பட்ட பொது முடக்கத்தால் பணப்புழக்கத்தில் சிக்கல் ஏற்பட்டு அந்நிறுவனம் இந்த முடிவினை எடுத்திருப்பதாக தெரிகிறது.


Advertisement

image

ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனம் ரத்து செய்துள்ள 6 திட்டங்களிலும் முதலீடு செய்திருப்பவர்களால் தற்போதைக்கு அவர்களின் நிதியை எடுக்க முடியாது. மற்ற நிதி திட்டங்கள் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு முதலீட்டாளர்களுக்கான தொகை வழங்கப்படும் என தெரிகிறது.

image


Advertisement

இந்நிலையில் குறிப்பிட்ட காலத்திற்குள் முதலீட்டாளர்கள் பணத்தை திரும்பப் பெறுவார்கள் என ஃபிராங்க்ளின் டெம்பிள்டனின் இந்தியாவிற்கான தலைவர் சஞ்சய் சாப்ரே உறுதி அளித்துள்ளார்.  இது குறித்து CNBC-TV18க்கு பேசிய அவர், நிதியை முடக்கி வைப்பது என்பது முதலீட்டாளர்கள் பணத்தை அபகரிப்பதாக அர்த்தமல்ல என தெரிவித்துள்ளார்.

புதையல், வைரக் கற்கள்... - நள்ளிரவில் மாந்திரீக பூஜை; மடக்கிப் பிடித்த போலீசார்!

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement