சென்னையில் 500ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு : மாவட்ட ரீதியில் எத்தனை ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வைரஸால் தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரங்களை பார்க்கலாம்.


Advertisement

சென்னையில் ஒரே நாளில் 28 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 523ஆக அதிகரித்துள்ளது. கோவை, திண்டுக்கல், ஈரோடு, நெல்லை ஆகிய மாவட்டங்களில் புதிதாக தொற்று கண்டறியப்படவில்லை. திருப்பூரில் 2 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 112ஆக அதிகரித்துள்ளது.மதுரையில் சிறார்கள் 6 பேர் உள்பட 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.

image


Advertisement

நாமக்கலில் புதிதாக 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, எண்ணிக்கை 59 ஆகவும், திருவள்ளூரில் புதிதாக ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, எண்ணிக்கை 53 ஆகவும் அதிகரித்துள்ளது. தஞ்சை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் புதிதாக பாதிப்பு ஏற்படவில்லை. புதிதாக விழுப்புரத்தில் 4 பேருக்கும், சேலம், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகை, தேனி மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் நோய் தொற்று  கண்டறியப்படவில்லை.

குருகிராமில் ஜூலை வரை ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’..? - அரசு சார்பில் பரிந்துரை

loading...

Advertisement

Advertisement

Advertisement