JUST IN

Advertisement

கொரோனா பீதியிலும் ஏவுகணை சோதனை நடத்திய பாகிஸ்தான்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தான், கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.


Advertisement

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஏறக்குறைய 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் பாகிஸ்தானையும் விட்டு வைக்கவில்லை. அந்நாட்டில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. பலி எண்ணிக்கையும் 250-ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. எனவே அங்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

கொரோனா பாதிப்பு ஒருபுறமிருக்க அந்நாடு ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் நேற்று கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவி சோதித்தது. அரேபிய கடல் பகுதியில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது. இது குறித்து கடற்படை செய்தி தொடர்பாளர் அர்ஷித் ஜாவத் கூறும்போது "போர்க்கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் இருந்து ஏவப்பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் கடலில் வைக்கப்பட்டிருந்த இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தன" என தெரிவித்துள்ளார்.

image

இது குறித்து பாகிஸ்தான் கடற்படை தளபதி ஜாபர் மஹ்மூத் அப்பாசி கூறும்போது "இந்த ஏவுகணை சோதனை பாகிஸ்தான் கடற்படையின் செயல்பாட்டு திறன் மற்றும் ராணுவ தயார் நிலைக்கு ஒரு சான்றாகும். எதிரிகளின் ஆக்கிரமிப்புக்கு தகுந்த முறையில் பதிலளிக்க பாகிஸ்தான் கடற்படை முழு திறன் கொண்டது. பாகிஸ்தான் கடற்படை எந்தவொரு நிலையிலும் தாய்நாட்டையும், அதன் நீர் எல்லைகளையும் பாதுகாக்கும்" என தெரிவித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement