சீர்காழி அருகே ஊரடங்கை கண்காணித்த காவல்துறை ட்ரோன் கேமராவை கல்வீசித் தாக்க முயற்சித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஊரடங்கை மதிக்காமல் சுற்றி திரிபவர்களை போலீசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர். கடந்த 24-ஆம் தேதி எடமணல் கிராமத்தின் வயல் வெளியில் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடினர். அப்போது அவர்களை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணித்தனர்.
இதனை அறிந்த அனைவரும் வயல்வெளியில் இருந்து தப்பியோடினர். அதில் ஒருவர் ட்ரோன் கேமரா மீது கல்லால் தாக்க முயற்சித்தார். ஆனால் கேமரா அருகே வந்ததும் அவரும் தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் வயல் வெளியில் கிரிக்கெட் விளையாடிய 10 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்த சீர்காழி போலீசார் அவர்ளை வீட்டிலிருப்போம், விலகியிருப்போம், கிரிக்கெட் விளையாட மாட்டோம் என உறுதி மொழி ஏற்கவைத்து எச்சரித்து அனுப்பினர்.
மேலும் கேமராவை தாக்க முயற்சித்த எடமணல் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்ற இளைஞரை சீர்காழி போலீசார் கைது செய்தனர்.
Loading More post
பிருத்வி ஷா - தவான் அதிரடி! சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜைக்கா நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - ஆர்.டி.ஐ மூலம் தகவல்
தியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி - தமிழகத்தில் புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகள்
அதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
தமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு