ஊரடங்கில் 2000 கி.மீ. பயணம் செய்ய ரூ.60 ஆயிரம் கட்டணம் ! அதிர்ந்து போன மாணவர் !

student-stares-at-2000-km-drive-home-Rs-60-000-taxi-bill

ஊரடங்கு காலத்தில் ராஜஸ்தானில் இருந்து மேற்கு வங்க மாநிலத்துக்கு 2000 கிலோ மீட்டர் பயணம் செய்ய ரூ.60 ஆயிரம் டாக்ஸி ஓட்டுநர்கள் கட்டணம் கேட்டதால் மாணவர் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றார்.


Advertisement

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதுமே 3 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு தினசரி பல்வேறு வழிகளில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல பல்வேறு மாநிலப் பல்கலைக்கழக மாணவர்களும் நடைப் பயணமாகவே சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

image


Advertisement

இந்நிலையில், ஈரானில் உள்ள பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்காக மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து சென்றவர் மாணவர் மினாஜ் அலாம். இவர் ஊரடங்குக்கு முன்பாக ஈரானில் இருந்து புனித யாத்திரைக்காக காஷ்மீர் சென்றுள்ளார். ஆனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்பு அவரால் சொந்த மாநிலத்துக்கு திரும்ப முடியவில்லை. இவர் ஈரானில் இருந்து வந்ததால் காஷ்மீரில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மரில் உள்ள ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டார். இதனையடுத்து இவர் தன்னை சொந்த மாநிலத்துக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், அம்மாநில அரசு நீங்கள் உங்கள் சொந்தச் செலவில் செல்லலாம் என தெரிவித்துள்ளது. இதனையடுத்து தனியார் ட்ராவல்ஸ் நிறுவனத்தை தொடர்புக்கொண்ட அவர் ராஜஸ்தானிலிருந்து மேற்கு வங்கம் மாநிலம் உத்தர் தினாஜ்பூர் செல்ல எவ்வளவு செலவாகும் என கேட்டுள்ளார். அதற்கு அந்த தனியார் நிறுவனம் 2000 கிலோ மீட்டர் பயணம் செய்ய ரூ.60 ஆயிரம் செலவாகும் என தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சியில் உறைந்துபோனார் மாணவர் மினாஜ் அலாம்.

image


Advertisement

இது குறித்து பேட்டியளித்த மினாஜ் "வெளிநாடுகளில் இருந்து காஷ்மீருக்கு வந்த பக்தர்கள் மற்றும் மாணவர்களை அரசாங்கமே திருப்பி அனுப்பி வைத்தது. ஆனால் என்னை மட்டுமே சொந்த செலவில் செல்ல சொல்லியிருக்கிறது. இது எந்த வகையில் நியாயம், ஏன் இந்தப் பாகுபாடு என புரியவில்லை. நான் ஈரானில் படிக்கபோனதே அங்கே எனக்கு செலவில்லாமல் இலவசமாக கல்வி கொடுத்தார்கள் என்பதற்காகத்தான். நான் வறுமையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்னால் எப்படி ரூ.60 ஆயிரம் செலவழித்து சொந்த ஊருக்கு செல்ல முடியும். அரசாங்கம் நிச்சயம் ஒரு ஏற்பாட்டை செய்யும் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement