ஊரடங்கால் தமிழகத்தில்  3,700 கோடி ரூபாய் மதிப்புக் கூட்டு வரி வசூல் குறைவு 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
 ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் சுமார் 3,700 கோடி ரூபாய் அளவிற்கு மதிப்புக் கூட்டு வரி வசூல் குறைந்துள்ளது.
 
கொரோனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு  அமலில் உள்ள நிலையில், மாநிலங்களின் மதிப்புக் கூட்டு வரி வசூல் குறித்து, பி.ஆர்.எஸ். என்ற தனியார் அமைப்பு ஆய்வு நடத்தியது. அதில் பிற மாநிலங்களைவிடத் தமிழகத்தில் 61 சதவிகிதம் வரி வசூல் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 image
 
பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருள் விற்பனை சரிவாலும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதாலும் தமிழகத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் மதுபானங்கள் விற்பனை மூலம் கிடைக்கக் கூடிய விற்பனை வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி 3, 736 கோடி ரூபாய் குறைந்துள்ளதாக பி.ஆர்.எஸ். ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
image
 
தமிழகத்துக்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 2, 667 கோடி ரூபாயும், உத்தரப் பிரதேசத்தில் 1,886 கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தெலங்கானாவில் 760 கோடி ரூபாயும், கேரளாவில் 1, 551 கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் ஒரு சதவிகிதம் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
loading...

Advertisement

Advertisement

Advertisement