செப்டம்பரில் கல்லூரிகளைத் திறக்க யுஜிசி நிபுணர் குழு பரிந்துரை

UGC-panel-recommends-academic-session-in-varsities-from-September--online-exams-wherever-possible

வரும் கல்வியாண்டில் ஜூலைக்குப் பதிலாக செப்டம்பரில் கல்லூரிகளைத் திறக்கலாம் என யுஜிசிக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.


Advertisement

கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில், பள்ளிக் கல்லூரி திட்டமிட்டபடி ஜூன், ஜூலை மாதங்களில் திறக்கப்படுமா என்ற கேள்வி இருந்து வருகிறது. தனிமனித இடைவெளி, சமூக இடைவெளியை தீவிரமாக கடைபிடித்து வருவதன் காரணமாகத்தான் இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்றே கட்டுக்குள் இருப்பதாக பலரும் கூறுகின்றனர். அப்படியிருக்கையில், கூட்டமாக மக்கள் சேரும் இடங்களை அடுத்த சில மாதங்களுக்காகவது தடை செய்ய வேண்டும் என பல வல்லுநர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

image


Advertisement

அந்த வரிசையில், கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது குறித்து பரிந்துரைப்பதற்காக நிபுணர் குழுவை யுஜிசி அமைத்திருந்தது. இந்த நிபுணர்க் குழு பல்வேறு பரிந்துரைகளை யுஜிசிக்கு வழங்கியுள்ளது. அதில், வரும் கல்வியாண்டில் ஜூலைக்குப் பதிலாக செப்டம்பரில் கல்லூரிகளைத் திறக்கலாம் என யுஜிசிக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும், இணைய வழியில் கல்லூரி வகுப்புகளையும், தேர்வுகளையும் நடத்துவதற்கும் நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement