JUST IN

Advertisement

வீட்டிலேயே மேங்கோ ஐஸ்கிரீம் செய்வது எப்படி? - விஜய் தேவரகொண்டாவின் வீடியோ பதிவு 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
தனது ஊரடங்கு காலத்து வாழ்க்கை எப்படி கழிகிறது என்பதை விளக்கும் விதமாக நடிகர் விஜய் தேவரகொண்டா ஒரு வீடியோ பதிவை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
 
 நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஒட்டு மொத்த உலகமும் முடங்கிப் போய் உள்ளது. எப்படிப்பட்ட சூழலிலும் மக்களின் ஒரே பொழுது போக்காக இருந்து வந்த திரையரங்கங்கள் அனைத்து இழுத்து மூடப்பட்டுள்ளன. மேலும் அனைத்து படப்பிடிப்புகளும் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆகவே தினம் ‘ஆக்‌ஷன் கேமிரா ஷார்ட்’ எனப் பரபரப்பாக இருந்து வந்த அனைத்து நடிகர்களும் வீட்டிலிருந்து வருகின்றனர்.
 
தனது ஒவ்வொரு தேவைக்கும் அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்த்து வாழ்ந்து வந்த அவர்கள் இப்போது அனைத்து தேவைகளையும் அவர்களே செய்து கொள்ள வேண்டிய நிலைமை வந்துள்ளது. ஆகவே வீட்டில் உள்ள நேரத்தில் அவர்கள் செய்து வரும் வேலைகளை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் அதனைப் பகிர்ந்து வருகின்றனர்.
 
image
 
இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா, இந்த ஊரடங்கு காலத்தில் தான் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை விளக்கும்படியான ஒரு வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் மூலம் தென்னிந்தியத் திரை உலகில் அதிக ரசிகர்களைப் பெற்ற நடிகர் இவர் என்பதால் இந்த  வீடியோ பலரது பார்வையை ஈர்த்துள்ளது.  ஆனால் இப்படி காலை 11.45 மணிக்கு தூங்கி எழுந்து பெற்றோர்களின் கோபத்தைக் கிளப்பும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது ரசிகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
image
 
அப்படி என்ன செய்துள்ளார் விஜய் என அந்த வீடியோவை போய் பார்த்தால் அவர், வீட்டுச் சமையலறையில் அவரே மாம்பழத்தை மிக்சியில் அரைத்து அதைவைத்து எப்படி மேங்கோ ஐஸ்கிரீம் தயாரிக்கலாம் என்பதை விளக்கிக் காட்டியுள்ளார் . மேலும் வீட்டில் உபயோகமற்று கிடக்கும் பொருட்களை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையும் விளக்கியுள்ளார். ஹோம் மேட் முறையில் அவரே குளிர்சாதனப் பெட்டியில் வைத்துத் தயாரித்த  அந்த ஐஸ்கிரீமை பெற்றோர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் விஜய்.
 
 
image
 
மேலும் வீட்டைச் சுத்தம் செய்வதுக் குப்பைகளை அகற்றுவது, கேம் விளையாடுவது என வீட்டுக்குள்ளாகவே தனது வாழ்நாள் எப்படிக் கழிகிறது என்பதையும் அவர் தன் ரசிகர்களிடம் இந்த வீடியோ மூலம் படம்பிடித்துக் காட்டி பகிர்ந்துகொண்டுள்ளார். 
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement