‘மூன்றாம் கட்ட கொரோனா பரவல் பெருமளவு தடுப்பு’ - மத்திய அரசு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாட்டில் கொரோனா பரவல் மூன்றாம் நிலைக்கு பரவாமல் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.


Advertisement

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஹர்ஷ் வர்தன், மாநில சுகாதார அமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், பொது முடக்கம் காரணமாக வைரஸ் பரவல் இரட்டிப்பாவது ஐந்து நாட்களில் இருந்து ஒன்பது நாட்களாக அதிகரித்துள்ளதாகவும், இது நம்பிக்கை அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.


Advertisement

மேலும், குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக தெரிவித்த ஹர்ஷ் வர்தன், கொரோனா தொற்றுள்ளோரில் இறப்பு விகிதம் குறைந்து வருவதாகவும் கூறினார். அடுத்து வரும் நாட்களில் மாநில அரசுகளுடன் இணைந்து பரிசோதனைகளை அதிகரித்து தொற்று பரவலை குறைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தன் வீட்டுப் பணிப் பெண்ணின் இறுதிச் சடங்கை நடத்தி நெகிழ வைத்த காம்பீர் !

loading...

Advertisement

Advertisement

Advertisement