ஒரு மாதமாக ஹாங்ஹாங்கில் இருக்கும் இளைஞரின் உடல்’ - மீட்டு தர உறவினர்கள் கோரிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


ஹாங்காங்கில் மாரடைப்பால் உயிரிழந்த சீர்காழியை சேர்ந்த இளைஞரின் உடலையும் அவரது மனைவியையும் மீட்டுதர அவரது உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement

 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள எடகுடிவடபாதி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜா (37). இவரின் தந்தை இறந்து விட்ட நிலையில், அவரது தாய் கமலா மற்றும் சகோதர சகோதரிகளுடன் அதே கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.

image


Advertisement

இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஹாங்காங் நாட்டில் ஆடிட்டராக பணிபுரிந்து வந்த ராஜாவுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அனிதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் ஹாங்காங்கில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி ராஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், ஹாங்காங்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனன்றி உயிரிழந்துள்ளார்.

image

இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கடந்த ஒரு மாதமாக ராஜாவின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து வர முடியாமால் அவரது மனைவி அனிதா தவித்து வருகிறார். இது குறித்து கடந்த வாரம் புதிய தலைமுறையில் ஒளிப்பரப்பப்படும் 360 நிகழ்ச்சி மூலம் இந்தச்செய்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்த ராஜாவின் உடலையும் அவரது மனைவியையும் ஹாங்காங்கில் இருந்து மீட்டு தர வேண்டி அரசுக்கு ராஜாவின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement