''தெறித்து ஓடும் இளைஞர்கள்'': திருப்பூர் போலீசாரின் புது வைத்தியம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முகக்கவசம் அணியாமல் வெளியில் நடமாடுவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் நூதன நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.


Advertisement

 கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான பொது ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியே செல்வது, முகக்கவசம் அணியாமல் நடமாடுவது போன்ற அலட்சியங்கள் பெரும்பாலான இடங்களில் அரங்கேறி வருகின்றன. இவ்வாறு நடந்து கொள்வோரை எச்சரிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்

image


Advertisement

அதில், முகக்கவசமும், தலைக்கவசமும் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வரும் 3 பேரை காவல்துறையினர் நிறுத்துகின்றனர். அவர்களை அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றுகின்றனர். அந்த வாகனத்திற்குள் கொரோனா பாதிக்கப்பட்டவர் போல சித்தரிக்கப்பட்டிருப்பவர் ஒருவரும் இருக்கிறார்.

 

image


Advertisement

வாகனத்தில் ஏற்றப்படும் இளைஞர்களுக்கு கொரோனாவின் தீவிரத்தை உணர்த்தும் விதமாக அவர் நடந்துகொள்கிறார். மெல்லிய நகைச்சுவையுடன் படமாக்கப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement