கொரோனா பரிசோதனையில் இருந்து காவலர் ஒருவர் தப்பிச் சென்ற நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பு காவல்படை காவலர் ஒருவர் கன்னியாகுமரியில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர்
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர்
அங்கிருந்து தப்பித்து நண்பர்களுடன் சொந்த ஊரான சேலத்துக்குக் கிளம்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் காரில் சென்றுகொண்டிருந்த அவரை, நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
4 பேரும் மீண்டும் கன்னியாகுமரி கொண்டுவரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், காவலரின் நண்பர்களான சேலம்
மாவட்டத்தை சேர்ந்த அலெக்சாண்டர், சூர்யா, மற்றும் அரவிந்த் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
‘மே மாதத்திற்குள் கொரோனாவால் 38 ஆயிரம் பேர் உயிரிழக்கலாம் ?’ - ஆய்வு கணிப்பு
Loading More post
தொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்!
மறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி
"கலப்படமில்லாத காங்கிரஸ்காரர்!" - மாதவராவ் மறைவுக்கு பீட்டர் அல்போன்ஸ் புகழஞ்சலி
அரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விசிகவினர் மீது வழக்குப் பதிவு
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்