[X] Close

சுதந்திர தினத்தன்று வெளியாகிறதா சூர்யாவின்  ‘சூரரைப் போற்று’ ? 

Subscribe
Suriya-Soorarai-Pottru-to-be-released-on-Independence-Day-weekend
சுதந்திர தினக் கொண்டாட்டமாக சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 
நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை ‘துரோகம்’, ‘இறுதிச் சுற்று’ போன்ற படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ளார். "ஏர் டெக்கான்" உரிமையாளரான ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தின் டீசர் கடந்த மாதம் ஜனவரி 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. டீசர் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது.
 
image
 
அதனையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை விமானநிலையத்தில் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில் சூர்யா, "ஸ்பைஸ் ஜெட்" விமானத்தின் நிர்வாக இயக்குநர் அஜய் சிங் உள்படப் பலரும் கலந்து கொண்டனர். மேலும், அகரம் சார்பில் 100 பள்ளி மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 
 
இப்படத்தின் படப்பிடிப்புக்கள் முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் அது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், திரைத்துறை முற்றிலுமாக முடங்கியது. திரையரங்கங்களும் மூடப்பட்டுள்ளன. எப்போது மீண்டும் பணிகள் தொடங்கும் என்ற உத்தரவாதம் இல்லாமல் நிலைமை நீடிக்கிறது. 
 
image
 
இந்நிலையில் ‘சூரரைப் போற்று’ படத்தைப் படக்குழு வரும் சுதந்திர தின கொண்டாட்டமாக ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை நிலைமை சீராகவில்லை என்றால் மீண்டும் வேறு ஒரு தேதிக்கு ஒத்தி வைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை. 
 
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close