கொரோனாவில் இருந்து மீண்ட 85 வயது மூதாட்டி - ஆனால் மகன் உயிரிழப்பு 

85-year-old-woman-in-AP-recovers-from-COVID-19
ஆந்திராவில் 85 வயது பெண்மணி ஒருவர் கொரோனா நோயிலிருந்து குணமடைந்துள்ளார்.
 
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள இந்துபூர் நகரத்தைச் சேர்ந்த ஒரு 85 வயது மூதாட்டி கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்ததால் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். ஆனால் இவர் கொரோனாவுக்கு எதிரான போரில் அவரது மகனை இழந்துள்ளார். மக்காவிலிருந்து திரும்பிய ஒருவர் மூலம் இவரது மகனுக்கு முதலில் கொரோனா நோய்த் தொற்று பரவியுள்ளது. அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி உயிரிழந்தார். அனந்தபூர்  மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்குப் பலியான முதல் நபர் இவர்தான். 
 
image
 
அதனையடுத்து அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி மற்றும் அவரது பேரன், அதாவது இறந்து போன மகனின் பிள்ளை மற்றும் வீட்டு டிரைவர் என அனைவருக்கும் எடுக்கப்படச் சோதனையில் கொரோனா நோய்க்கான அறிகுறிகள் இல்லை என்பது உறுதியானது. மேலும் இந்துபூர் நகரத்தில் உள்ள இதர குடும்பத்தைச் சேர்ந்த இரு நபர்களுக்கு கொரோனா பாசிடிவ் சோதனை செய்யப்பட்டது.  ஆக மொத்தம் ஐந்து பேரும் இந்த மாவட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 
image
 
இது குறித்து இம்மாவட்ட ஆட்சியர் காந்தம் சந்திருது, “இந்த மூதாட்டிக்கு அறிகுறி இல்லாமல் இருந்தபோதிலும், அவரது வயது மற்றும் உடல்நிலை காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாங்கள் அவருக்கு 24 மணி நேர இடைவெளியில் தொடர்ச்சியாக இரண்டு சோதனைகளை மேற்கொண்டோம். அவை நெகடிவ் என வந்துள்ளது. ஆகவே அவர் கடந்த 21 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” என்று கூறியுள்ளார். மேலும் அவரது பேரன், டிரைவர் மற்றும் இரண்டு பேரும் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement