"தோனியை சிஎஸ்கே தேர்ந்தெடுத்த அந்த நாள்" மனம் திறந்த தினேஷ் கார்த்திக் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிஎஸ்கே நிர்வாகம் தோனியை தேர்ந்தெடுத்த அந்த நாளில் என் இதயமே நின்றது போல ஆகிவிட்டது என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.


Advertisement

image

தமிழ்நாட்டு வீரரான தினேஷ் கார்த்திக் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். தோனிக்கு முன்பாகவே சிறு வயதிலேயே இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த கார்த்திக் சிறப்பாகவே விளையாடியுள்ளார். பல முக்கியமான போட்டிகளில் இந்திய அணிக்காக வெற்றியையும் பெற்றுத் தந்துள்ளார். ஆனால், தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை அளிக்காததால் அணியிலிருந்து அடிக்கடி வெளியேற்றப்படுவார். இப்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வருகிறார் கார்த்திக்.


Advertisement

image

தமிழ்நாடு ரஞ்சி அணியின் இப்போதும் மிகச்சிறந்த வீரராக தினேஷ் கார்த்திக் இருக்கிறார். அதுவும் சென்னையைச் சேர்ந்த கார்த்திக்குக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இப்போது வரை இடம் கிடைக்கவில்லை. இது குறித்து கிரிக்பஸ் இணையதளத்துக்கு கொடுத்துள்ள பேட்டியில் மனம் திறந்துள்ளார் தினேஷ் கார்த்திக். அதில் "2008 இல் ஐபிஎல் அணிகளுக்கான தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நான் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இருந்தேன். அப்போது தமிழ்நாட்டை சேர்ந்தவரும் இந்திய அணியில் இருப்பவர் ஒருவருக்குதான் சிஎஸ்கே அணி தேர்ந்தெடுக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. அது நானாகத்தான் இருக்கக்கூடும் என நினைத்திருந்தேன்" என்றார்.

image


Advertisement

இது குறித்து மேலும் தொடர்ந்த அவர் "என்னை நிச்சயம் அணியில் சேர்ப்பார்கள் என நினைத்தேன், ஆனால் கேப்டனாக என்னை நியமிப்பார்களா என்ற கேள்வி மட்டும் என்னுள் எழுந்துக்கொண்டு இருந்தது. ஆனால் சிஎஸ்கே தோனியை கேப்டனாக நியமித்ததாக செய்தி வந்தது. அப்போது தோனி என் அருகிலேயேதான் இருந்தார் ஆனால் தன்னை சேர்க்கப்போகிறார்கள் என்ற செய்தியை அவர் சொல்லவே இல்லை. ஒருவேளை அவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்தச் செய்தியை கேட்ட பின்பு என் இதயமே நின்றது போல இருந்தது. பின்பு அணியிலாவது எடுப்பார்கள் என நினைத்தேன், 13 ஆண்டுகளாக சிஎஸ்கேவுக்காக விளையாட காத்திருக்கிறேன்" என கூறியுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement