3 நாட்களாக உணவு கிடைக்கவில்லை - தமிழக ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொல்கத்தாவில் நோயாளிகளை விட்டுவிட்டு திரும்பும்போது ஒடிசா மாநில எல்லையில் காவல்துறையினர் சிறைப்பிடித்துள்ளதால், 3 நாட்களாக உணவு கிடைக்காமல் தமிழக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர்.


Advertisement

image

"சரிசமம் என்றிடும் முன்பு உனைச்சமம் செய்திடப்பாரு " - கமல் வெளியிட்ட பாடல்..!


Advertisement

வேலூர் தனியார் மருத்துவமனையில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த நோயாளிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் செல்லும்போது மேற்குவங்க மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் புதிய தலைமுறையின் செய்தி எதிரொலியால், அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து விடுவிக்கப்பட்டனர். 

image

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 21 ஆயிரத்தை தாண்டியது..!


Advertisement

பின்னர் நோயாளிகளை விட்டுவிட்டு திரும்பி வரும் போது மேற்குவங்கம் - ஒடிசா மாநில எல்லையான பலாசூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் ஓட்டுநர்கள், ஒடிசா மாநில காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை அம்மாநில காவல்துறையினர் விடுவிக்க மறுப்பதால், கடந்த 20ஆம் தேதி முதல் உணவு இன்றி தவித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு தங்களை மீட்க வேண்டும் என ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement