அமெரிக்காவில் 4 புலிகள் 3 சிங்கங்களுக்கு கொரோனா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
(கோப்பு புகைப்படம்)

அமெரிக்காவின் பிரபல உயிரியல் பூங்காவில் 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.image


Advertisement

ட்ரம்ப் தனது முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும்: உலக சுகாதார அமைப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது பிரபல பிராங்க்ஸ் உயிரியல் பூங்கா. இங்கு ஏராளமான விலங்குகள் உள்ளன. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியதையடுத்து கடந்த மார்ச் மாத இறுதியில் அங்குள்ள நடியா என்ற புலிக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. இதனையடுத்து புலி, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.  பரிசோதனை முடிவு ஏப்ரல் 5-ஆம் தேதி வந்த நிலையில் புலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் மேலும் 4 புலிகள் மற்றும் 3 ஆப்பிரிக்க சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 


Advertisement

image

6 மாத கால அவகாசம் தேவை: கோரிக்கை வைக்கும் திரையரங்க உரிமையாளர்கள்

அத்துடன் பூங்காவில் உள்ள 7 பூனைகளுக்கும் கொரொனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கொரோனா தொற்றானது பூங்காவில் பணிபுரிந்து வந்த ஊழியரிடம் இருந்து பரவியிருக்கலாம் எனவும் மேலும் கொரோனா தொற்று பரவமால் இருக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement