மாடு இழுத்ததால் ஏரியில் மூழ்கி சிறுவன் மரணம் - தந்தை கண் முன்னே சோகம்..!

Son-died-front-of-Father-in-Ariyalur

அரியலூரில் மாடு இழுத்துச் சென்றதால் ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்‌ அருகே உள்ள கார்குடி காலனி தெருவைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் கேசவன், அதே ஊரில் உள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தான். கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், தந்தை மாட்டை ஓட்டிச் செல்லும் போது சிறுவன் கேசவனும் உடன் சென்றிருக்கிறான்.

ஜியோவில் 43,610 கோடி முதலீடு செய்யும் ஃபேஸ்புக்.. - காரணம் என்ன ?

அப்போது சின்னசாமி மாட்டை குளிப்பாட்டி கொண்டிருந்துள்ளார். மற்றொரு புறம் மாட்டை பிடித்து கொண்டிருந்தான் சிறுவன். அப்போது திடீரென கேசவனை மாடு ஏரிக்குள் இழுத்துச் சென்றுள்ளது. சிறுவனை மீட்க அவனது தந்தையும் முயற்சித்துள்ளார். இருப்பினும் ஆழமான இடத்தில் சேற்றில் சிக்கிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவன் இறந்ததால் அவரது தந்தை சின்னசாமி கதறி அழுதார்.


Advertisement

இதுகுறித்து தா.பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தந்தை கண் முன்னே மகன் குளத்தில் மூழ்கி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தில் மூழ்கியது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement