"மே மாத மத்தியில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும்": அதிர்ச்சியூட்டும் ஆய்வு !

Coronavirus-epidemic-could-peak-in-India-by-mid-May

மே மாதத்தின் மத்தியில்தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை தொடும் என்று டைம்ஸ் நெட்வொர்க் பிரொட்டிவிட்டி அமைப்புடன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.


Advertisement

image

சீனாவின் வூஹான் மாநிலத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகெங்கிலும் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 77 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 45 ஆயிரம் பேர் கொரானா வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.


Advertisement

image

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி பிரொட்விட்டி என்ற அமைப்புடன் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் மே 22 தேதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தொடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வில் இப்படி அதிகப்படியான பாதிப்பு ஏற்படுத்தும்போது அரசாங்கமும் மருத்துவக் குழுவினரும் இத்தகைய சூழலை எப்படி சமாளிக்கலாம் என்ற யோசனையும் கூறியுள்ளது.

இந்த ஆய்வின் முடிவுப்படி இந்தியாவில் மே 3 இல் 38534 பேரும், மே 8 இல் 46819 பேரும், மே 14 இல் 65601 பேரும், மே 22 இல் 75349 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் வகையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் இறப்பு சதவிகிதம் குறைவாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement