தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் இன்று மட்டும் 33 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Advertisement

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 33 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளது.

image


Advertisement

 அத்துடன் 662 பேர் குணமடைந்துள்ளனர். 18 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், 946 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை 59 ஆயிரத்திற்கும் மேலான பரிசோதனைகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவின் 2-வது அலை வீச வாய்ப்பு: வீரியமானதாக இருக்குமென எச்சரிக்கை

loading...

Advertisement

Advertisement

Advertisement