1921 என்ற எண்ணில் இருந்து அழைப்பு கொடுத்து கொரோனா தொடர்பான ஆய்வினை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக சமூக இடைவெளியை உண்டாக்க வேண்டுமென்பதால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் இந்த ஊரடங்கு மே3 ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசு பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கைப்பேசியில் அழைப்பு விடுத்தால் காலர்ட்யூனாக கொரோனா விழிப்புணர்வு வாசகம் ஒலித்தல், பிரத்யேக செயலிகள் மூலம் கொரோனா பற்றி அறிதல் மற்றும் தடுத்தல் போன்ற பல நடவடிக்கைகளில் மத்திய அரசு இயங்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது 1921 என்ற அழைப்பை விரைவில் மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் 1921 என்ற எண்ணில் இருந்து அழைப்பு கொடுத்து கொரோனா அறிகுறி, பரவுதல் உள்ளிட்ட ஒரு ஆய்வினை எடுக்க முடிவு செய்துள்ளது.
இதற்கான அனைத்து செல்போன்களுக்கும் 1921 என்ற எண்ணில் இருந்து அழைப்பு கொடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை பயன்படுத்தி வேறு எண்ணில் இருந்து யாரேனும் பொழுதுபோக்கிற்காகவோ வேறு திட்டங்களுடனோ உங்களுக்கு அழைப்பு விடுக்கலாம் என்றும் கவனமாக இருந்து அது போன்ற அழைப்புகளை தவிர்க்க வேண்டுமென்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
அதே வேளையில் அரசின் தொலைபேசி எண்ணான 1921ல் இருந்து அழைப்பு வந்தால், நலனை கருத்தில் கொண்டு இந்த ஆய்வுக்கு பொதுமக்கள் முழு ஆதரவையும் அளிக்க வேண்டுமென்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
செல்போன் ரீசார்ஜ், மின் விசிறி விற்பனை... - சில தளர்வுகளை அறிவித்துள்ள மத்திய அரசு
Loading More post
வாட் வரி 2% குறைப்பு: புதுச்சேரியில் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை!
வீரன் பொல்லாலனுக்கு மணிமண்டபம்: தமிழக அரசு அறிவிப்பு
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலா? - இன்று மாலை தேதி அறிவிப்பு
விவசாயிகள், ஏழைகளின் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்