குமரியில் உயிரிழந்த வியாபாரி : 2 முறை ஆம்புலன்ஸில் திருப்பி அனுப்பப்பட்ட துயரம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் சிக்கித் தவித்த கேரளா வியாபாரி உ‌டல்நலக்குறைவால் உயிரிழந்தார்.


Advertisement

கேரளா மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளி பகுதியை சேர்ந்த தாஹா என்ற பொரி வியாபாரி, கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலய திருவிழாவுக்காக கடந்த மார்ச் 1-ஆம் தேதி சென்றார். ஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாத அவர், இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகளால் நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கன்னியாகுமரி செய்திகள் | Dinamalar


Advertisement
(கோப்பு புகைப்படம்)
 

"ஏழ்மையை அகற்ற கொள்கைகளை மறுசீரமைக்க வேண்டும்" - ரத்தன் டாடா

நோயின் தீவிரத்தால் கேரள மாநிலம் ஆலப்புழை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் புறப்பட்ட நிலையில், அவரை கேரள சோதனைச்சாவடியில் இருமுறை திருப்பி அனுப்பியுள்ளனர். இதற்கிடையே தாஹாவின் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார்.

அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க இரு மாநில எல்லையோர மாவட்ட ஆட்சியர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் கொரோனா பரிசோதனைக்கு பின்புதான் கேரளாவுக்குள் உடல் அனுமதிக்கப்படும் என கேரளா போலீசார் கூறி வருகின்றனர்


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement