வேலூரில் உணவுக்கும் வழியில்லை, தப்பிக்கவும் வழியில்லை என்பதால் கொலைக்குற்றவாளிகள் 4 பேர் போலீஸில் சரண் அடைந்துள்ளனர்.
வேலூர் கொசப்பேட்டை பகுதி எஸ்.எஸ்.கே.மானியம் தெருவை சேர்ந்தவர் உதயக்குமார். இவர் கிளப் ஒன்று நடத்தி வருகிறார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், உதயக்குமார் அதே பகுதியை சேர்ந்த உறவுக்கார பெண்ணை 3வதாக திருமணம் செய்ய இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆந்திரம் அடைந்த அந்த பெண்ணிண் அண்ணண் இம்மானுவேல் தன்னுடைய கூட்டாளிகளுடன் சேருந்து நேற்று மாலை உதயகுமாரை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினார்.
இதில் உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த வேலூர் தெற்கு காவல் துறையினர் தப்பியோடியவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளிகள் இம்மானுவேல், நவின்குமார், நிர்மல், அந்திரியாஸ் ஆகிய 4 பேரும் இன்று வேலூர் தெற்கு காவல் துறையினரிடம் சரணடைந்தனர்.
“ஊரடங்கால் வறுமையில் சிக்கித்தவிக்கிறோம்”: 82 வயது நெசவுத் தொழிலாளர் வேதனை...!
இதனிடையே கொலை செய்த 4 பேரும் தப்பி போகும் போது வழியில் சென்ற பெண்ணிண் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் தடுப்புக்காக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் இவர்களால் வேலூரை வீட்டு வெளியே செல்லமுடியவில்லை. வழிபறி செய்த 10 சவரன் தங்க சங்கலியையும் விற்க முடியவில்லை. மேலும் சாப்பிடுவதற்கு உணவகங்கள், கடைகள் எதுவும் இல்லாததால் உணவின்றி தவித்துள்ளனர்.
சரணடைய நீதிமன்றமும் இல்லாததால் காவல் நிலையத்தில் சரணடைவது என முடிவு செய்து, வேலூர் அடுத்த சித்தேரியில் சுற்றி திரிந்துள்ளனர். பின்னர் வழக்கறிஞர் ஒருவரின் உதவியோடு காவலர்களை வரவழைத்து சரணடைந்துள்ளனர். இதையடுத்து இவர்களை கைது செய்த காவல் துறையினர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்க்கொண்டனர். பின்னர் நீதிபதி முன் ஆஜர் படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் குடியாத்தம் கிளைச்சிறையில் அடைத்தனர்.
ஆக்ஷன் படக் காட்சியை மிஞ்சும் அதி பயங்கரமான கார் விபத்து
வேலூர் மத்திய சிறையில் அடைக்காமல் குடியாத்தம் கிளைச்சிறையில் குற்றவாளிகளை அடைப்பதர்க்கான காரணம் குறித்து வேலூர் மாவட்ட எஸ்.பி.பிரவேஷ்குமாரை நேரில் தொடர்பு கொண்டு கேட்ட போது, “தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் இதனை தடுக்கும் பொருட்டு வேலூர் மத்திய சிறையில் அண்மை காலமாக வரும் குற்றவாளிகளை அடைப்பது இல்லை. மேலும் இது போன்ற குற்றவாளிகளை தற்போதைக்கு குடியாத்தம் கிளைச்சிறையில் அடைத்து வருகிறோம். இதற்காக இந்த சிறை இப்போது பயன்படுத்தப்படுகிறது. இங்கு வருபவர்களுக்கும் முதலில் தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படுகிறது.” எனத் தெரிவித்தார்.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!