"கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய என் கல்லூரியில் இடம் அளிக்கிறேன்": விஜயகாந்த்

Vijayakanth-give-space-in-his-college-premises-to-bury-corona-affected-patient

கொரானாவல் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரியில் இடம் தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.


Advertisement

image

சென்னை கீழ்பாக்கத்தில் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து உடல் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இது தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதேபோல பல ஊர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கின் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Advertisement

image

இதனையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார் "கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். கொரோனாவால் பாதிக்கபட்டவரின் உடலை அடக்கம் செய்வதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை மக்களுக்கு தமிழக அரசு புரிய வைக்க வேண்டும். கடவுளுக்கு அடுத்தப்படியாக நாம் கருதுவது மருத்துவர்களைதான். ஆனால் மக்கள் சேவை செய்யும் மருத்துவர்களுக்கே இந்நிலை என்பது மனதிற்கு வேதனையளிக்கிறது".

image


Advertisement

மேலும் அந்த அறிக்கையில் "கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால். ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறப்பட்டுளளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement