திருச்சி: மே 3 வரை 6 அம்மா உணவகங்களில் இலவச உணவு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மே 3-ம் தேதி வரை திருச்சி மேற்கு, திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட 6 அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்குமென மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் தமிழகத்தில் அம்மா உணவகங்களில் 3 வேளையும் உணவு வழங்கப்படுகிறது. இது பலருக்கும் பயனுள்ளதாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மே- 3ம் தேதி வரை திருச்சி மேற்கு, திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட 6 அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

image


Advertisement
  • புத்தூர் ( அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் அருகில்)
  • தென்னூர் உழவர் சந்தை 
  • உறையூர் சாலை ரோடு 
  • ஜங்சன் ராக்கின்ஸ் சாலை 
  • கல்கண்டார்கோட்டை 
  • அரியமங்கலம் ஜெகநாதபுரம்

ஆகிய 6 இடங்களிலுள்ள அம்மா உணவகங்களில், வரும் மே 3-தேதி வரை காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளும் இலவசமாக உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவினை திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஏற்றுக்கொண்டுள்ளது.

 இறந்தவரின் உடலில் இருந்து கொரோனா பரவுமா? - மருத்துவர்கள் சங்கம் விளக்கம்

loading...

Advertisement

Advertisement

Advertisement