JUST IN

Advertisement

ஏசி பயன்படுத்தினால் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகமா...?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா பரவத் தொடங்கியது முதலே அது குறித்த வதந்திகளும் போட்டி போட்டுக் கொண்டு பரவியது. கொரோனா அதிக வெப்பத்தில் தாக்கு பிடிக்காது என்ற ஒரு வதந்தியும் அதில் ஒன்று. உண்மையில் கொரோனா வைரஸ் குளிர், வெயில் என பாராமல் உலகின் அனைத்து வகையான தட்பவெப்ப நிலைக் கொண்ட நாடுகளிலும் பரவிவிட்டது. சமீபத்தில் சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் மெசேஜ்கள் மூலம் ஒரு தகவல் பரவி வருகிறது. “ஏசி பயன்படுத்துவதால் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகம். அதனால் ஏசி பயன்படுத்தாதீர்கள்.” என்பது தான் அது.


Advertisement

image

 இதனை PIB அதாவது press information bureauவின் உண்மைக் கண்டறியும் குழு மறுத்துள்ளது. அது வெளியிட்டுள்ள தகவலின் படி கொரோனாவானது ஏசி பயன்படுத்தாத போது பரவாது என்ற தகவல் பொய். மேலும் Window AC பயன்படுத்துவதால் 100% எந்த பாதிப்பும் கிடையாது ஷாப்பிங் மால்கள் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் பயன்படுத்தப்படும் centralised Acயில் இருந்து மட்டும் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கச் சொல்லி அறிவுறுத்துகிறது PIB. என்றாலும் இது பற்றி உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை. 


Advertisement

சமூக விலகல் மற்றும் கைகளை தூய்மையாக வைத்துக் கொள்வது மட்டுமே கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான தற்போதைய ஒரே வழி என்பதனையும் press information bureau வின் உண்மைக் கண்டறியும் குழு பதிவு செய்கிறது. எனவே பொதுமக்கள் இப்படியான வதந்திகளை நம்பவோ அதனை பரப்பவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement