"ரோகித் சர்மாதான் சிறந்த கேப்டன்" கவுதம் காம்பீர் கருத்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் டி20 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மாதான் சிறந்த கேப்டன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.


Advertisement

image

கலையும் ஐபிஎல் கனவு.. நெருங்கும் டி20 உலகக்கோப்பை... தோனியின் எதிர்காலம் என்ன? 


Advertisement

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தாண்டு நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள கவுதம் காம்பீர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் ஐபிஎல் போட்டிகளில் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த காம்பீர் "ரோகித் சர்மாதான் சிறந்த கேப்டன்" என்றார்.

image

மேலும் தொடர்ந்து காம்பீர் " அவர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கெனவே 4 முறை கோப்பையை வென்றுள்ளது. கேப்டன் என்றால் கோப்பைகளை வெல்ல வேண்டும். ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டனாக அவர் இருப்பார். அவர் தன்னுடைய ஓய்வுக்குள்ளாக 6 முதல் 7 ஐபிஎல் கோப்பைகளை நிச்சயம் வெல்வார்" என்றார்.


Advertisement

image

நாங்க ரெடி.. நீங்க ரெடியா? - ஐபிஎல் குறித்து பேசிய  இலங்கை!

கேப்டனாக இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குறித்து கூறிய கவுதம் காம்பீர் " வெஸ்ட் இண்டீல் வீரர் ஆண்ட்ரூ ரஸலை வெறும் 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தோம். ஆனால் பவன் நெல்லியை டெல்லி அணி 8 கோடி ரூபாய்ப்பு ஏலம் எடுத்தது. நீங்களே கற்பனை செய்து பாருங்கள். நான் விளையாடிய ஏழு வருடங்களாக அவர் கொல்கத்தா அணியில் இருந்திருந்தால், நாங்கள் நிச்சயமாக கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு டைட்டிலை வென்று இருப்போம்" என்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement