மும்பையில் கடற்படை வீரர்கள் 20 பேருக்கு கொரோனா - தொடர்பிலிருந்தவர்களுக்கு பரிசோதனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மும்பையில் கடற்படை வீரர்கள் 20 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3 ஆயிரத்து 323 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 331 பேர் குணமடைந்துள்ளதாகவும், 201 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

         image


Advertisement

அதற்கு அடுத்தபடியாக டெல்லியில் ஆயிரத்து 707 பேருக்கும், தமிழகத்தில் ஆயிரத்து 372 பேருக்கும், மத்தியப் பிரசேதத்தில் ஆயிரத்து 310 பேருக்கும் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 835ல் இருந்து 14 ஆயிரத்து 792 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 15ஆக உயர்ந்துள்ளது. 452ஆக இருந்த உயிரிழப்பு, தற்போது 488 ஆக அதிகரித்துள்ளது.

       image

மும்பையில் கடற்படை வீரர்கள் 20 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 7ஆம் தேதி மும்பை கடற்படை தளத்தில் ஒருவருக்கு நோயத் தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அங்கு பணியில் இருந்த மேலும் 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement

           image

நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே அனைத்து கடற்படை தளங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹைதராபாத்திலிருந்து நடைப்பயணமாகப் புறப்பட்ட தமிழக மாணவர்கள் - சொந்த ஊர் சேர்ந்த கதை 

loading...

Advertisement

Advertisement

Advertisement