ஊரடங்கின் மூலம் ஒற்றுமையை நிலைநாட்டிய ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஊரடங்கின் மூலம் ஒற்றுமையை நிலைநாட்டியுள்ள  ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலோ செயல்பாடுகள் உலக நாட்டு தலைவர்கள்  மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 


Advertisement

வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல் தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்டுவதில் தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிரமாக இருக்கிறார் என பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அண்மை காலமாக ட்ரம்பின் பேச்சும் செயல்பாடுகளும் கூட  இதனை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கின்றன. 

குறிப்பாக ஒற்றுமையாக  செயல்பட வேண்டிய இந்த காலக்கட்டத்தில் கூட மாகாண ஆளுநர்களை பகைத்து கொண்டு வருகிறார் ட்ரம்ப். கூட்டாட்சி நாட்டில் ஒரு தலைமை எப்படி செயல்பட கூடாது என்பதற்கான உதாரணமாக ட்ரம்ப் மாறி இருக்கும் நிலையில், இத்தகைய சூழலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாகி இருக்கிறார் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல்.


Advertisement

இந்தியாவில் கொரோனாவிற்கு முதல் காவல் அதிகாரி உயிரிழப்பு

image

மாகாணங்‌ளில் ஊரடங்கை தளர்த்தும் அதிகாரம் தன்னிடம் மட்டுமே இருப்பதாக கூறி விமர்சனத்துக்கு ஆளானார் ட்ரம்ப். ஆனால் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலோ மாகாண ஆளுநர்களை ஒருங்கிணைத்து ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றி கண்டுள்ளார். கொரோனா தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மாகாண ஆளுநர்களுடன் ஆலோசித்த பின்னரே எடுத்தார். அதாவது நோய் தடுப்பு பணியில் மாநில ஆளுநர்களின் பங்களிப்பை அதிகரிக்க செய்ததே மெர்கலின் நிர்வாகத் திறமைக்கு எடுத்துகாட்டு. 


Advertisement

நாள்தோறும் செய்தியாளர் சந்திப்பில் கோபப்படுவது பொய்யான தகவலை வெளியிடுவது என ட்ரம்ப் திணறி வரும் நிலையில், ஏஞ்சலா மெர்கலோ, உணர்வுப்பூர்வமாக செய்தியாளர்களிடம் பேசி வருகிறார். நமது அன்புக்கு பாத்திரமான எத்தனை பேரை நாம் இழக்க போகிறோமோ என பேச்சை தொடங்கி, நாட்டை காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்பதை மக்களுக்கு உணர்த்தினார். 

காலையில் ஒரு தேர்வு, மதியம் ஒரு தேர்வு?: தயாராக வேண்டிய சூழலில் மாணவர்கள்..!

image

எதிர்க்கட்சிகளை சேர்ந்த மாநில ஆளுநர்களை தன் பேச்சை கேட்க வைத்தது மெர்கலின் திறமைக்கு ஓர் எடுத்துகாட்டு.‌ அமெரிக்காவை போல ஜெர்மனியும் விரைவில் அதிபர் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. ஆனால் தேர்தலையும், தங்களுக்கு இடையிலான வித்தியாசங்களையும் புறந்தள்ளிவிட்டு அரசியல் தலைவர்கள் இங்கு சேவையாற்றுகின்றனர். மத்திய, மாகாண அரசுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால், ஜெர்மனியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய இரண்டு நாடுகளிலுமே கூட்டாட்சி முறையே உள்ளது. கூட்டாக இணைந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு ஜெர்மனியும், கூட்டாக இல்லையெனில் பெரும் பிரச்னைகளை சந்திக்க வேண்டும் என்ப‌தற்கு அமெரிக்காவும் உ‌தார‌ண‌மாகியுள்ள‌‌‌ன. 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement