குழந்தைகளின் ஆபாச படங்கள் சென்னையில் அதிகளவில் இணையத்தில் தேடல்... அதிர்ச்சி தகவல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குழந்தைகளின் ஆபாச படங்கள் சென்னையில் அதிகளவில் இணையத்தில் தேடப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

ஊரடங்கு காலத்தில் ஆபாச படங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவித்துள்ளன. குறிப்பாக இந்தியாவில் சில மாநிலங்கள் குழந்தைகளின் ஆபாச படங்களை இணையத்தில் பார்ப்பதற்கு அதிகளவில் தேடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

image


Advertisement

ஒரு ஆளுக்கு ரூ.3ஆயிரம்: லாரியில் 47 பேரை அழைத்துச் சென்று போலீசில் சிக்கிய ஓட்டுநர்!

ஐ.சி.பி.எஃப் (Indian Child Protection Fund) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த ஊரடங்கு காலத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு, இணையதளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்கள் அதிக அளவில் தேடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் உள்ள 100 நகரங்களை கண்காணித்ததில், சென்னை மற்றும் புவனேஷ்வரில்தான்  அதிகளவில் குழந்தைகளின் ஆபாச படங்களை இணையத்தில் தேடியது தெரியவந்திருக்கிறது.

டெல்லி, கொல்கத்தா, சென்னை, மும்பை போன்ற பெரு நகரங்களை தவிர்த்து வளர்ந்து வரும் இரண்டாம் கட்ட நகரங்களான லக்னோ,ஆக்ரா,சிம்லா, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலும் குழந்தைகளின் ஆபாச படங்கள் அதிக அளவு தேடப்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


Advertisement

image

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பைக்கில் வருபவர்களுக்கு நேரக்கட்டுப்பாடு..!

தேசிய குற்றப்பதிவு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2016-ஆம் ஆண்டு முதல் 2018 வரை குழந்தைகளுக்கு எதிராக 3.77 லட்சம் குற்றங்கள் நடந்துள்ளதாகவும், இதில் 2016 ஆம் ஆண்டு 1.06 லட்சம் குற்றங்களும், 2017 ஆம் ஆண்டு 1. 29 லட்சம் குற்றங்களும், 2018 ஆம் ஆண்டு 1.41 லட்சம் குற்றங்களும் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement